தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ‘கே.பி’ என்கிற குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தாக்கல் செய்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மழல்கொடவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஒரு நபரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியுமெனக் கூறிய நீதிபதி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கைது செய்வதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கருத்து தெரிவிக்கையில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு இந்திய நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அவரை கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் மறுத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை நிராகரித்த அரசு தரப்பு சட்டத்தரணி, இந்திய அரசாங்கத்திடமிருந்து முறையான வேண்டுகோளொன்று முன்வைக்கப்பட்டால் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற காரணத்தினால், இந்த மனுவை விசாரணை செய்யும் அவசியம் ஏற்படவில்லை என்று அரசு தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனடிப்படையில், குமரன் பத்மநாதன் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு மேலும் கால அவகாசம் வழங்கிய நீதிபதி, மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

0 Responses to கே.பி.யை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது: மேன்முறையீட்டு நீதிமன்றம்