Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கம் என்றைக்குமே நாட்டைக் காட்டிக் கொடுக்காது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் போது அனைத்து துறைக்கும் சுதந்திரம் வழங்கப்படும். ஒற்றையாட்சி எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பெளத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும். அதேபோன்று ஏனைய மதத்தவர்களுக்கும் உரிமை வழங்கப்படும். எனவே மக்களுக்கான அரசியலமைப்பினை நாம் உருவாக்கவுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சிறிபோபுர பிரதேசத்தில் உதா கம்மான வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது: சஜித் பிரேமதாச

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com