Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் தினத்தை யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வஜிர அபேவர்த்தன கூறியுள்ளதாவது, “மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பில் சிலர் கவலைப்படுகின்றார்கள். 1971, 1987, 1988 ஆண்டுகளில்     தெற்கில் இடம்பெற்ற  கலவரங்களின்  போது ஏற்பட்ட  இழப்புக்களால்     இறந்தவர்களையும் நினைவு கூருகின்றார்கள்.

எமது மதத்தின் படி இறந்ததன் பின்னர் அனைத்து உறவுகளுக்கும்  மரியாதை  செலுத்த  வேண்டும்.  இறந்ததற்குப்  பின்னர்  நல்லவரா  கெட்டவரா   என்பதெல்லாம்  தேவையில்லை.  எல்லா  மனிதர்களும்  இறப்புக்கு பின்  மரியாதை செலுத்த  வேண்டியவர்கள்  என்றே  எமது மதம் எமக்கு  சொல்கிறது. எனவே மாவீரர் தினம் அனுஷ்டிப்பது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல.

மாவீரர் தினம் அனுஷ்டிக்கும் விடயத்தை பொலிஸார் மீதோ, இராணுவத்தின் மீதோ, அரசியல்வாதிகளின் மீதோ திணிப்பது நல்லதல்ல. மாறாக, அனைவரும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மாவீரர் தினத்தை யாரும் அனுஷ்டிக்கலாம்; பிரச்சினையில்லை: வஜிர அபேவர்த்தன

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com