Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியிலிருந்து அகற்றியதிலும், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டு வந்ததிலும் ‘பேஸ்புக்’ என்கிற சமூக ஊடகம் முக்கிய பங்காற்றியதா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

ஆனால், பேஸ்புக்கைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்றைக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை முடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பேஸ்புக் பக்கம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பேஸ்புக் மூலம் நாட்டில் நடக்கும் அனைத்து ஊழல், மோசடிகளையும் மக்கள் அறிந்து கொள்ளவும், மக்களுக்கு தெளிவுபடுத்தவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியிலிருந்து அகற்றியதில் பேஸ்புக் முக்கிய பங்காற்றியது: ஜீ.எல்.பீரிஸ்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com