சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத்திற்கு எந்தவிதமான இரகசிய உடன்படிக்கையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “சர்வதேச அழுத்தங்களில் இருந்து மீளவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தீர்மானித்ததே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு ஆட்சியை பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அத்தோடு, அதியுச்ச அதிகார பகிர்வு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தோற்கடிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.” என்றுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது என கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளவே கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தீர்மானித்தது: சம்பிக்க ரணவக்க