அரசியல் கட்சி நிர்வாகிகளில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் மீது இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை வரவேற்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே) அறிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளாக இருக்கும் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சொத்து விபரங்களை தேர்தல்கள் ஆணையக்குழுவிடம் கையளிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். சொத்து விபரங்களை கையளிக்காதவர்கள் மீது இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கையை வரவேற்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொது மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் நிதி ரீதியாக அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனரா இல்லையா என்பதை அறிவதுடன் அவர்கள் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்ட அதிகாரங்களை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்குகின்றனரா என்பதை உறுதிப்படுத்தவே அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடமிருந்து சொத்து மற்றும் பொறுப்பு உறுதிப்படுத்தல் பத்திரம் கோரப்படுகின்றது.
சகல மக்கள் பிரதிநிதிகளும் தமது சொத்துக்களை வருடாந்தம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to சொத்து விபரங்களை வழங்காத கட்சி நிர்வாகிகள் மீதான தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கை; கபே வரவேற்பு!