நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கூறியுள்ளதாவது, “நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக்கூடிய அரசியலமைப்புடன், சமூக நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
இப்போது, பல நாடுகளில் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் அகதிகளாக இருப்பதுடன் வடக்கிலுள்ள அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் மீண்டும் ஆயூதம் தூக்காதவாறு அனைவருக்குமான சமூக நியாயத்தை நிறைவேற்ற வேண்டும்.
நீண்ட காலமாக இடம்பெற்ற அபிவிருத்தி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்கள் நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் 25 மாவட்டங்களுக்கும் நியாயமான அபிவிருத்தி பயன்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.” என்றுள்ளார்.

0 Responses to ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வோம்: ஜனாதிபதி