தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வாக அமையாது. ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளனர்.
ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் நிலைப்பாடு. அதற்கு அமைவாகவே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளில் வடக்கு- கிழக்கு புறக்கணிக்கப்படுதல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவற்றிற்கு பதிலளித்த பிரதமர், இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் சகல தரப்பினதும் கருத்துக்களை பெற்று ஒருமித்த தீர்வை எட்டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல முதலீட்டு திட்டங்களை உருவாக்க முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், இதன்போது வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார். இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வல்ல; தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள்: ரணிலிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு!