மது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது என்று, புதுவை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் தொடர்பான பேனர் வெளியிடுதல், அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், சிறைச் சாலைகளுக்கு புகார் பெட்டி வழங்குதல், நூல் வெளியீடு, திருமணப்பதிவு செய்து பதிவு சான்று வழங்குதல், உள்ளிட்டவற்றின் விழா ஒருங்கிணைந்த நீதிமன்ற கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது,
இதில் கலந்துக்கொண்ட கிரண்பேடி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,தேசிய சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்றேன். மதுவின் காரணமாகவே பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் வன்கொடுமை போன்ற அதிகப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவால் வரும் மார்ச் மாதம் முதல் புதுவையில் உள்ள மது கடைகள் எண்ணிக்கை குறையும். மதுவால் கிடைக்கும் வருவாயை மட்டும் புதுவை அரசு நம்பி இருத்தல் கூடாது. மதுவை அருந்துவோர் எண்ணிக்கை குறையும் போது குற்றங்கள் பெருமளவில் குறையும்.
மதுவின் மூலம் வரும் வருவாய், சுகாதாரத்துக்காகவும், குற்றங்கள் தடுப்பு, இதர தீமைகளுக்கே செலவாகிறது. மதுக்கடைகள் குறைக்கப்பட்டால் குற்றங்கள் குறையும். என்று கிரண்பேடி பேசினார்.

0 Responses to மது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது: கிரண்பேடி