Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உளறிய சேகர் ரெட்டி; அடுத்த ரெய்டு?

பதிந்தவர்: தம்பியன் 22 December 2016

சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அடுத்து மன்னார்குடி குடும்பத்தினர் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருமான வரித்துறையின் சோதனையில் வசமாக மாட்டிக் கொண்டார் தொழிலதிபர் சேகர்ரெட்டி. இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் குறித்து கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தப்பட்டது. அடுத்து இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் உள்பட 13 இடங்களில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை சேர்ந்தவர்கள் அதிரடியாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த விசாரணைக்கு மூலக்காரணமே சேகர்ரெட்டி என்பது எல்லோரும் தெரிந்ததே. அதே நேரத்தில் சேகர் ரெட்டியிடம் முதலில் விசாரித்த போது அவர் எந்த தகவலையும் எங்களிடம் சொல்லவில்லை. அனைத்து பணமும், தங்கமும் தன்னுடையதே  என்று அடம் பிடித்தார். அடுத்த எங்களது விசாரணை வேறுவிதமானது. அப்போதுதான் அவர், முக்கிய தகவல்களை சொன்னார் என்கிறார் மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரி ஒருவர். 

சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்திய போது, நாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார். அதோடு பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கத்துக்குரிய வருமானத்துக்கான ஆதாரம் குறித்தும் கேள்வி கேட்டோம். அதற்கு அவர், சரியான பதிலளிக்கவில்லை. ஒருகட்டத்தில் சேகர்ரெட்டியிடம் உங்கள் குறித்த முழு விவரங்களும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் சிக்கி விட்டன. இனிமேல் கடவுளே நினைத்தால் கூட உங்களை காப்பாற்ற முடியாது என்று சொல்லிய போது அவரது முகத்தில் ஒருவித பதற்றத்தை காண முடிந்தது.

சேகர்ரெட்டிக்கு சிபாரிசு செய்ய ஒருசில போன் கால்கள் வந்தன. அவர்களும் ஒருகட்டத்துக்குப் பிறகு ஒதுங்கி கொண்டனர். அந்த தகவலையும் சேகர்ரெட்டியிடம் சொன்னப்பிறகு, ரகசிய லாக்கர் குறித்த விவரத்தை எங்களிடம் சொன்னார். அவர் சொன்ன இடத்திலிருந்து அந்த லாக்கரை திறந்து பார்த்த போதுதான் முழு விவரங்களும் எங்களுக்கு தெரியவந்தது. அந்த லாக்கரில் அவருடைய முழு பண பரிவர்த்தனை, பிசினஸ் விவரங்கள் இருந்தன. இதுவரை யார், யார் சேகர்ரெட்டியின் தொடர்பில் இருந்தவர்களின் பெயர் பட்டியல்கள் உள்பட முழு விவரங்களும் கிடைத்தன. 

அந்த பட்டியலில் முதன்மை செயலாளர் ராமமோகன ராவ் பெயரும் இருந்தது. அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் விசாரணை நடத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம். அங்கிருந்து கிரீன் சிக்னல் வந்தவுடன் நேற்று நள்ளிரவு வருமான வரித்துறை அவசர ஆலோசனை நடத்தியது. இந்த சோதனைக்கு செல்லும் அதிகாரிகளைத் தேர்வு செய்தோம். அவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்து அதிகாலையில் ராமமோகன ராவ், வீட்டுக்கு அதிரடியாக சென்றோம். சேகர் ரெட்டி வசம் கிடைத்த  ஆதாரங்களே எங்களுக்கு போதுமானது என்றாலும் அதற்கு சப்போர்ட்டாக சில ஆவணங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

ராமமோகன ராவை தொடர்ந்து இன்னும் சிலரது வீடு, அலுவலகங்களில் எங்களது சோதனையை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அந்த பட்டியலில் அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் உள்ளனர். அடுத்து மன்னார்குடியை சேர்ந்தவர்களின் பட்டியலும் உள்ளது. அந்த பட்டியலில் இருப்பவர்களிடம் விரைவில் சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். சேகர் ரெட்டியால் அமைச்சர்கள், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிக்குவது உறுதியாகி விட்டது. எங்களது அடுத்தக்கட்ட சோதனை நடக்கும்போது முழு தகவல்கள் வெளிச்சத்துக்கு தெரியவரும் என்கின்றனர் வருமான வரித்துறையினர்.

0 Responses to உளறிய சேகர் ரெட்டி; அடுத்த ரெய்டு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com