அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
சீனாவின் 1.15 மில்லியன் டொலர் முதலீட்டுடன் இலங்கைக்கு 20 வீத பங்கும் சீனாவுக்கு 80 வீத பங்கு என்ற அடிப்படையில், 99 ஆண்டுகால குத்தகைக்கு இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தை சர்வதேச தரம் வாய்ந்த துறைமுகமாக மாற்ற இந்தியாக, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம்: சீனா- இலங்கை இடையே வரும் ஜனவரியில் ஒப்பந்தம்!