Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு தொடர்பில் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதனை, கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனக் கூறி நேற்று சனிக்கிழமை அதிகாலை விடுதலை செய்திருந்தது.

இந்த நிலையிலேயே, தீர்ப்பு குறித்து திருப்தி அடையப் போவதில்லை என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அரசாங்கம் சந்தேக நபர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியிருந்தது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to ரவிராஜ் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும்: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com