ஓய்வு பெற்றுச் செல்லும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் நேற்று வியாழக்கிழமை உரையாடியுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய பான் கீ மூன், நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில், இலங்கையைப் புதிய பாதையில் பயணிக்கச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெறும் எனவும் கூறியுள்ளார்.
பதவியிலிருந்து விலகிச்சென்றாலும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பான் கீ மூன் இதன்போது உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பான் கீ மூன், தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பான் கீ மூன்- மைத்திரியுடன் பேச்சு; இலங்கையின் முன்னேற்றத்துக்கு பாராட்டு!