பாகிஸ்தானின் புதிய இராணுவத் தலைவரான கமார் ஜாவேட் பஜ்வா ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு உளவுத்துறையான ISI இன் தலைமைப் பதவியில் இருந்து லெப்டினண்ட் ஜெனெரல் ரிஸ்வான் அக்தாரை பதவி நீக்கம் செய்ததுடன் புதிய தலைவராக லெப்டினண்ட் ஜெனெரல் நவீட் முக்தார் என்பவரை நியமனம் செய்துள்ளார்.
இதைவிட இராணுவத்தின் ஏனைய முக்கிய பதவிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். இராணுவத் தலைவரான கமார் ஜாவேட் பஜ்வா இரு கிழமைகளுக்கு முன்பு தான் பதவியேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் தி டாவ்ன் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படி அந்நாட்டின் பிரதமரான நவாஸ் ஷெரீப் புதிய இராணுவ நிர்வாகத்துக்கு தீவிரவாதத்துக்கு எதிராக மிகவும் முனைப்புடன் செயற்படுமாறும் அல்லது சர்வதேசத்தின் தனிமைப் படுத்துதலை எதிர்கொள்ளுமாறும் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

0 Responses to பாகிஸ்தானின் உளவுத்துறையான ISI இன் புதிய தலைவராக லெப்டினண்ட் ஜெனெரல் நவீட் முக்தாரை நியமித்த புதிய இராணுவத் தளபதி