இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜனவரி 20 ஆம் திகதி நடைபெறவுள்ள டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவை குறைந்தது 18 ஜனநாயக சட்ட வல்லுனர்கள் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா அத்துமீறி நுழைந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிங்டனுக்கு எதிரானத் தகவல்களைப் பரப்பியதால் தேர்தலின் போக்கை மாற்றியமைத்திருந்ததே குறித்த 18 சட்ட வல்லுனர்களினதும் இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த சட்ட வல்லுனர்களில் டிரம்பின் தனிப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக செயற்பட்ட ஜோன் லெவிஸ் உட்பட 3 சட்ட வல்லுனர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனநாயகப் பிரதிநிதியான லெவிஸ் டிரம்பை கடுமையாகச் சாடியதுடன் 1987 இல் காங்கிரஸுக்கு வந்தது முதல் முதன் முறையாக அதிபர் பதவியேற்பு விழா ஒன்றைத் தான் புறக்கணிப்பதாகவும் ரஷ்யத் தலையீட்டில் தெரிவான டிரம்ப் பொருத்தமான அதிபராகத் தனக்குப் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
லெவிஸ் குறித்து டிரம்ப் கருத்துத் தெரிவிக்கையில் அவர் அதிகம் பேசுவதாகவும் ஆனால் செயலில் எதையும் காட்டவில்லை என்றும் கூறியதுடன் அதிபருக்கு உதவிகரமாக தன்னை மாற்றிக் கொள்வதில் அவர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர ரஷ்யாவின் பங்கு குறித்து எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் ஏதுமில்லை எனவும் கூறியுள்ளார். இதேவேளை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு குடியேறவுள்ள டொனால்ட் டிரம்ப் கடந்த 150 வருடங்களில் முதன் முறையாக செல்லப் பிராணி ஏதும் இன்றிக் குடியேறும் அதிபராகவும் மாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் அவரது குடும்பம் மற்றும் பரம்பரையில் செல்லப் பிராணி வைத்திருக்கும் பழக்கம் இல்லை எனப்படுகின்றது.
இது குறித்து அதிபர் இல்லத்தின் செல்லப் பிராணிகளுக்கான அருங்காட்சியகத்தின் தாபகரான க்ளைரே மக்லீன் கருத்துத் தெரிவிக்கும் போது அமெரிக்காவின் முதற் குடிமக்களான அதிபரின் குடும்பத்தினர் செல்லப் பிராணிகளோடு வெள்ளை மாளிகைக்குக் குடியேறும் போது தாமும் பொது மக்களைப் போன்றவர்களே என்ற எண்ணத்தை அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்துள்ளனர் என்றும் இதனால் அதிபர் இல்லத்தின் செல்லப் பிராணிகள் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்கவுள்ள 18 ஜனநாயக சட்ட வல்லுனர்கள்!