அண்மையில் லிபியாவில் இருந்து அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றிக் கொண்டு இத்தாலிக்கு மத்திய தரைக் கடலில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியில் இருந்து 50 Km தொலைவில் லிபிய கடற்பரப்பில் கடலில் மூழ்கி விபத்தில் சிக்கியதில் 100 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.
தகவலைக் கேள்விப் பட்டதும் பிரான்ஸ் கடற்படைக் கப்பல் மற்றும் இரு வர்த்தகக் கப்பல்களுடன் விமானங்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. ஆனால் உயிருடன் 4 பேரை மாத்திரமே மீட்க முடிந்ததாகவும் 8 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் பலியான 100 பேரும் எந்த எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படும் பணி இனித்தான் தொடங்க வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளிக்கிழமை மத்திய தரைக் கடலில் இது போன்று அளவுக்கதிகமாக சட்ட விரோதமாகப் பயணித்த 550 அகதிகள் மீட்கப் பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

0 Responses to லிபிய கடற்பரப்பில் அகதிகள் படகு மூழ்கி விபத்து! : 100 இற்கும் மேற்பட்டவர்கள் பலி