ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்துள்ளதன் மூலம், 50 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய சந்தையைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, நிறுத்தப்பட்டதால், இலங்கைக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமை 500 மில்லியன் மக்கள் கொண்ட பாரிய சந்தையை கைப்பற்ற உதவியாக இருக்கும். இலங்கை 2003ஆம் ஆண்டு 2,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழந்த நிலையில், 4,800 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றிருந்தது. எனினும், அதே வருடம் பங்களாதேஷ் வரிச்சலுகையை தனியாக அனுபவித்ததுடன், 26,000 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றுக்கொண்டது. அந்த நாட்டுக்கு பணப்பிரச்சினை இல்லை. ஆனால் எமக்கு உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையால் 50 கோடி மக்கள் தொகை கொண்ட சந்தையைப் பிடித்துள்ளோம்; மஹிந்தவுக்கு ரணில் பதில்!