மியான்மாரில் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து UNSC இற்கு 23 நோபல் பரிசு வென்றவர்களின் குழுவும் பூகோள தலைவர்கள் சிலரும் முறைப்பாடு செய்துள்ளனர். மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் றோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றைத் தடுக்க அந்நாட்டுத் தலைவரும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூ க்யி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த நோபல் பரிசு வென்றவர்கள் குழு ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு எழுதியுள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு எழுதப் பட்ட இந்த திறந்த கடிதத்தில் 13 நோபல் பரிசு வென்றவர்கள் மற்றும் 10 உலகத் தலைவர்கள் அடங்கலான 23 பூகோள ஐகோன்கள் றோஹிங்கியா இனத்தவரின் உரிமையை உறுதி செய்வதில் தவறிய ஆங் சான் சூ க்யி மீதான தமது ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும் செல்வி சூ க்யி தான் தலைவர் என்பதால் தலைமை தாங்குவதற்கும் அனைத்துத் தரப்புக்கும் பாரபட்சம் இன்றி மனிதாபிமானம் மற்றும் இரக்கத்துடன் ஆட்சி செய்வதற்கும் அவர் மீதே பொறுப்புள்ளது எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் ராக்கைன் மாநிலத்தில் இராணுவத்தின் பிரசன்னம் காரணமாக 27 000 பொது மக்கள் தமது இருப்பிடத்தை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் பங்களாதேஷுடனான எல்லையில் அமைந்துள்ள போலிஸ் சாவடிக்கு அண்மையில் ஆக்டோபர் 9 ஆம் திகதி மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் குறைந்தது 86 பொது மக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இராணுவத்தின் அடக்குமுறையில் இருந்து தப்பி வந்த றோஹிங்கியா முஸ்லிம்களின் கூற்றுப் படி அவர்களில் பலர் இராணுவத்தின் வசம் கொல்லப் பட்டும் கற்பழிக்கப் பட்டும் சித்திரவதை செய்யப் பட்டும் உள்ளதாகத் தெரிய வருகின்றது.
1994 ஆம் ஆண்டு ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் சூடானின் மேற்கு டர்ஃபுர் பகுதியிலும் பொஸ்னியா கொசோவோ பகுதிகளிலும் இடம்பெற்ற இனவழிப்புக்கு ஈடாகவும் தற்போது மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இடம்பெறுவதாக கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா இன் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் பான் கீ மூன் அல்லது அடுத்த மாதம் புதிய பாதுகாப்பு செயலாளராகப் பதவியேற்கவுள்ள அந்தோனியோ குட்டெர்ரெஸ் ஆகிய இருவரில் ஒருவர் மியான்மாருக்கு உடனே விஜயம் செய்து அங்கு நிலமையை சீராக்க முயற்சிக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

0 Responses to றோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் ஆங் சான் சூ க்யி இனை எச்சரிக்கும் உலகத் தலைவர்கள்