நல்லாட்சி அரசாங்கத்தினை யாரும் கவிழ்க்க வேண்டியதில்லை. அதன் செயற்பாடுளே அதனைக் கவிழ்த்துவிடும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் மக்கள் எதிர்ப்பலைகளை மாத்திரமே உருவாக்குவதாகவும், இந்த எதிர்ப்பலைகளே அரசாங்கத்தைக் கவிழ்த்துப்போடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சோசலிஸ மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிமை கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களின் ஆணையை மீறி வரிச்சுமையை அதிகரித்தல், பொருட்களின் விலை அதிகரிப்பு, சொத்துக்களை அழித்தல் போன்ற விடயங்களுக்கு மக்கள் பதிலளிக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் தாமதிப்பதால் போராட்டத்தை மேற்கொள்வதே மக்களிடம் இருக்கின்ற இறுதி வழியாகும். இவ்வாறு மக்கள் எதிர்ப்பலையை யார் ஏற்படுத்துவது? அரசாங்கமே தவிர வேறு யாரும் இல்லை. எனவே அரசாங்கக் கவிழ்ப்பை அரசாங்கமே செய்கிறது. அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பலைகள் ஏற்பட்டதன் விளைவாக அரசாங்கம் கவிழ்ந்த வரலாறுகள் உலகில் காணப்படுகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கம் தானாகவே கவிழும்: வாசுதேவ நாணயக்கார