ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒருவரையொருவர் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல்வாதிகள் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகின்றீர்கள். அவ்வாறு பேசிப் பேசியே நீங்கள் மக்களை முட்டாளாக்குகின்றீர்களா? ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் யார்? அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா? என்றும், இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மைத்திரியும், ரணிலும் ஊழல்வாதிகள் அல்ல: சம்பந்தன்