மைத்திரி யுகத்தில் ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடைந்துள்ளன. அம்பாந்தோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்ட கிராமவாசிகள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு சம்பவங்கள் மூலம் இவை வெளித் தெரிவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது, நல்லாட்சி அரசாங்கம் கவிழக் கூடிய அடையாளங்களை வெளிகாட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை தலதா மாளிகைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அம்பாந்தோட்டை பொருளாதார வலயத் திட்டத்தின் மூலம் 15,000 ஏக்கர் நிலம் இல்லாமல் போகும் என்பது சிறிய விடயமல்ல. கிராமத்தில் உள்ள தமது காணிகள் பறிபோகும் போது மக்கள் எதிர்ப்பை வெளியிடுவது சாதாரணமானது. இப்படியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது பொருத்தமற்றது. பிக்குமார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சட்டத்தின் ஆதிபத்தியம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான அடையாளங்களை தெளிவாக காணமுடிகிறது. அம்பாந்தோட்டை தொடர்பாக எந்த புரிந்துணர்வும் இல்லாத அரச தலைவர்கள் அம்பாந்தோட்டை பற்றி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த பிரதேசம் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி யுகத்தில் ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சி: மஹிந்த