சீனாவின் பல பகுதிகளில் கடந்த வருட இறுதி முதல் தாக்கி வந்த கடும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்தப் பனியைத் தீண்டவோ அதனுடன் விளையாடவோ வேண்டாம் என சீனாவின் காலநிலைத் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக குறித்த பனி வளி மண்டலத்தில் உள்ள அழுக்கை உறிஞ்சிப் பெய்திருப்பதால் அது அசுத்தம் நிறைந்ததாக இருக்கின்றது என்பது கூறப்பட்டுள்ளது. ஆயினும் இதில் இன்னொரு புறம் நண்மை இருப்பதாகவும் பீஜிங்கின் காலநிலை முன்னறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அது என்னவெனில் இந்த வார இறுதியில் குளிர்ந்த காற்றுடன் வீசி வரும் வெண்பனி வளிமண்டலத்தை சுத்தம் செய்தும் வருகின்றது என்பதே அந்த சாதகமான நிலமையாகும்.
மேலும் 2016 இறுதி நாள் வரை பீஜிங் உட்பட பல நகரங்களை ஆக்கிரமித்திருந்த புகார் மண்டலத்தை இந்தப் பனிப்பொழிவு சற்று போக்கி வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. இதனால் தான் சாலையில் பனிப்பொழிவு அதிகம் சூழ்ந்துள்ள இடங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் வீதிகளில் செல்பவர்கள் கட்டாயம் குடை பாவிக்குமாறும் தமது உடலில் விழும் பனியை உடனே அகற்றி விடுமாறும் கூடத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக வடக்கு சீனாவை குளிர் காலத்தில் கடுமையாகப் பாதித்து வரும் வளி மாசுபாடு மற்றும் புகார் என்பவை சீனாவுக்கு மிகப் பெரிய சுற்றுச் சூழல் அச்சுறுத்தலாகத் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சீனத் தலைநகர் பீஜிங்கில் பெய்துள்ள கடும் பனி : பனியைத் தீண்ட வேண்டாம் என அரசு எச்சரிக்கை