தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மாணவர் மக்கள் எழுச்சியின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை டெல்லியில் சந்தித்த தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் மூன்று கோரிக்கைககளை முன் வைத்துப் பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். வர்தா புயல் நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முன் வைத்துப் பேசிய முதல்வருடன், 50 நிமிடங்களாகப் பேசிய பிரதமர், உரையாடலின் இறுதியில், 'ஜல்லிக்கட்டை வரவேற்கிறேன்' ஆயினும், ஜல்லிக்கட்டுத் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவசர சட்டம் குறித்து எந்தஉறுதியும் கொடுக்க முடியாது எனவும், இது தொடர்பில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.
இச் சந்திப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர், தமிழக மக்கள் பொறுமை காக்க வேண்டும் நல்லதே நடக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

0 Responses to பிரதமரிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார் முதல்வர்