போர்க்குற்றங்கள் உள்ளிட்ட கடந்த காலக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணி முன்வைத்துள்ள பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “யார் எவ்வகையான பரிந்துரைகளை முன்வைத்தாலும் அதனை ஏற்பதா? இல்லையா? என்பது பற்றி அமைச்சரவையே இறுதி முடிவை எடுக்கும். சில அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் பரிந்துரைகளை முன்வைக்க முடியும். ஆனால் உள்ளகப் பொறிமுறையில் வெளி நாட்டு பிரதிநிதித்துவம் சேர்க்கப்படப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது.
தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைகளை வெளிநாட்டு நிபுணர்கள் வழங்க முடியும். ஆனால் விசாரணைகளில் உள்நாட்டு நீதிபதிகளே பங்குகொள்வார்கள். நல்லிணக்க செயலணி போன்று பலரது அறிக்கைகள் காணப்படுகின்றன. சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கைகளில் உள்ள விடயங்களை ஆராய தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதிலுள்ள எல்லாவற்றையும் முழுமையாக அமுல்படுத்த முடியாது. அதில் என்னென்ன விடயங்களை அனுமதிக்க முடியும் என்பதை அமைச்சரவையே தீர்மானி க்கும்.
வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியோம் என்பதை இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடமும் தெரிவித்தோம். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். விசேட ஞானமுடைய அல்லது உலகளாவிய ரீதியலான நிபுணர்களை அல்ல, உள்நாட்டிலுள்ள சிலரையே இந்த செயலணிக்கு நாம் நியமித்தோம். அதன்படி அவர்கள் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதிலுள்ள விடயங்களை ஏற்பதா? இல்லையா? என்பதை நாமே தீர்மானிப்போம்.” என்றுள்ளார்.
நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணியின் இறுதி அறிக்கை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அதில், வெளிநாட்டு நீதிபதியின் கட்டாயப் பங்களிப்போடு கலப்பு விசாரணைப் பொறிமுறை வலியுறுத்தப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புக்கு இடமில்லை; நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரையை அரசு நிராகரிப்பு!