ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கம் செய்யும் அரசியல் தீர்வினை வழங்குவதில் தற்போதையை நல்லாட்சி அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக ஈபிஆர்எல்எப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது, தமிழ் மக்களும் கூட ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு- கிழக்கு தமிழ் மக்களும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (நேற்று ஞாயிற்றுக்கிழமை) இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகைப்புக்குள்ளாகியுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதா, அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவில் அங்கம் வகிப்பதா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to அரசியல் தீர்வினை வழங்குவதில் நல்லாட்சி அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்