தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கோரும் சமஷ்டித் தீர்வு தொடர்பில் பரிசீலிக்கவே அரசாங்கம் தயாராக இல்லாத போது, தீர்வு பற்றிய நம்பிக்கை எப்படி ஏற்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு- கிழக்கில் இன்னமும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்கின்றன. குடியேற்றங்களுக்கு தேவையான திட்டங்களை அரசாங்கமே செயற்படுகின்றது. இராணுவத்தினரின் உறவினர்கள், குடும்பங்கள் வடக்கில் குடியமர்த்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு சமஷ்டித் தீர்வு அவசியமானது. ஆனால், அதனை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to நிரந்தரத் தீர்வினை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்