ஜல்லிக்கட்டுத் தடைக்கான தமது எதிர்ப்பினை வெளியிட்டு அலங்காநல்லூரில் இன்று திங்கட்கிழமை காலை திரண்ட பொதுமக்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். சில காளைகள் தடையை மீறிப் பாய்ந்தன.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அலங்காநல்லூரில் போராட்டம் தொடர்கின்றது.
வாடிவாசல் அருகே கூடிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிவாசல் அருகே அதிக அளவில் மக்கள் கூட போலீசார் தடை விதித்திருந்த போதிலும் அதனை மீறி, ஏராளமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிவாசல் முன் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது வாடிவாசல் வழியாக தடையை மீறி, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளையை பார்த்த உற்சாகத்தில், அங்கு கூடியிருந்த மாடுபிடி வீரர்கள் காளையை பிடிக்க முயன்றனர். தொடர்ந்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

0 Responses to அலங்காநல்லூரில் தடையை மீறி காளைகள் பாய்ந்தன; பொதுமக்கள் தொடர்ந்தும் போராட்டம்!