அரச படைகளிலிருந்து கடந்த காலத்தில் உத்தியோகப்பூர்வமாக விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல், கடமைக்கு வராமல் இருக்கும் 42,000 முப்படையினரை கைது செய்யுமாறு பொலிஸாரிடமும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
இவர்களுள் 34,000 இராணுவ வீரர்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகப்பூர்வமான விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல், கடமைக்கு வராமல் இருக்கும் முப்படையினருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்திலும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாத 42,000 பேரே கைது செய்யப்படவுள்ளதாகவும், முப்படையினரும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில், பொலிஸார் அவர்களை கைது செய்வர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான அதிகாரம், இராணுவத்தினரிடம் இல்லாமையினாலேயே, பொலிஸாருக்கு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களை கைது செய்வதற்கான பல்வேறு செயற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கும் என்றும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், அவர்கள் சேவைக்காலத்திலிருந்து நீக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to தப்பியோடிய 42,000 முப்படையினரையும் கைது செய்யக் கோரிக்கை!