ஜல்லிக்கட்டுத் தொடர்பிலான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருவதால், ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என என தமிழக வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது. வழக்கின் தீர்ப்பு தற்போது எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன் தீர்ப்பை வழங்க இயலாது என தெரிவித்தது.

0 Responses to ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்