பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று புதன்கிழமை கிட்டத்தட்ட 35 000 பொது மக்கள் ஒன்று கூடி அந்நாட்டு அதிபர் மைக்கேல் டெமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் மீது சுமத்தப் பட்ட ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பல பொது மக்கள் பொது உடமைகளுக்கு சேதம் விளைவித்ததுடன் அரச அலுவலகங்களுக்கும் தீ மூட்டினர். இவ்வாறு தீ மூட்டப் பட்டதில் வேளாண் அமைச்ச அலுவலகக் கட்டடம் உட்பட பல அமைச்சு அலுவலகங்களும் எரிந்து சாம்பலாகி உள்ளன.
கலவரத்தை அடக்க முயன்ற போலிசார் மீது கற்கள் வீசப்பட்டது. பதிலுக்கு போலிசார் கூட்டத்தைக் கலைப்பதற்காக ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பொது மக்கள் மீது பிரயோகித்ததுடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பொது மக்களை அப்புறப் படுத்தினர். இதனால் பிரேசிலியாவில் கடும் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரேசிலில் அதிபர் பதவி விலகக் கோரி நடத்தப் பட்ட மிகப் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் வன்முறை