நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினருக்கு உரிய பணிப்புரைகளை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கன்பரா நகரில் உள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவராலயத்தில் நேற்று புதன்கிழமை அங்கு வாழும் இலங்கையைர்களைச் சந்தித்தார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் விரிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ஒரு தரப்பினர் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு அரசாங்கத்தை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க பகிரத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அத்தகைய செயற்பாடுகளை தாம் அரசியல் சூழ்ச்சியாக பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 Responses to நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோருக்கு எதிராக பாரபட்சமின்றி தண்டனை: ஜனாதிபதி