‘காணாமற்போனோர் தனிப்பணியகம்’ எந்தவொரு தருணத்திலும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு வழிகோலாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பணியகத்தினூடாக போர்க்காலத்தில் காணாமற்போனவர்களை தேடிப் பார்ப்பதே நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனோர் தனிப்பணியகம் தொடர்பிலான மறுசீரமைப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீண்டகாலமாக இடம்பெற்ற போரில் பலர் காணாமற்போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும் நோக்குடனேயே இந்தப் பணியகம் நிறுவப்படுகிறது.
போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரும் காணாமற்போனவர்களின் நிலைமையைக் கண்டறிவதே இந்தப் பணியகத்தின் பிரதான நோக்கமாகும். வேறு எந்த அதிகாரமும் இந்தப் பணியகத்துக்கு கிடையாது. அதற்கும் மேலாக எக்காரணம் கொண்டும் எவருக்கு எதிராகவும் இந்தப் பணியகத்தின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யமாட்டோம்.
காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்தினூடு இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறும் என்று சிலர் கூறிவருகின்றனர். எனினும் போர்க்குற்ற விசாரணைகளுக்காக இந்தப் பணியகம் நிறுவப்படவில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் குறித்த பணியகத்தினூடு அதுபோன்ற விசாரணை நடத்தப்படாது.” என்றுள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு வழிகோலாது: ரணில்