ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தாயக மக்களுடன் தமிழக மக்களும், புலம்பெயர் மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்புகளின் போது, தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கு மாகாண சபையில் நிலவும் சர்ச்சை நிலை மற்றும் புதிய அரசியலமைப்பு மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பன தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தாயக மக்களுடன் தமிழக மக்களும் புலம்பெயர் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும்: சுரேஷ்