வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என்பதற்கு, வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளரமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தினால் கல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும், புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஏ.சுதந்திரன் கூறியுள்ளதாவது, “முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசு கட்சியுடன் ஆலோசிக்காமல் செயற்படுவதாக, அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சரின் செயற்பாடு அமைந்துள்ளது. சி.வி.விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியைப் புறக்கணித்து தன்னிச்சையாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதற்கு, புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும்.”என்றுள்ளார்.

0 Responses to புதிய அமைச்சர்களின் நியமனம் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார் என்பதற்கான சான்றாகும்: சுமந்திரன்