20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு மாகாண சபை அறிவித்துள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்காக மத்திய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 20வது திருத்த சட்டமூலம், கடந்த 04ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் ஆராயப்பட்ட நிலையில், இன்று இறுதித் தீர்மானம் எடுப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய வடக்கு மாகாண சபையின் 105வது அமர்வு இன்று வியாழக்கிழமை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது, “தற்போது எம் முன் இருப்பது வரைவு, அது சம்பந்தமாக தன்னால் கருத்துக்கள் கொடுக்கப்பட வேண்டி இருக்கின்றது. இத் திருத்தத்தில் குழப்பங்கள் இருப்பதனால் கருத்துக்களை கூறமுடியாது, ஏதாவது திருத்தம் செய்வதானால் எமக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னர் கருத்துக்களை தெரிவிக்கமுடியும்.” என்றார்.
வடக்கு மாகாண சபையின் கடந்த அமர்வில் 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டு கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்திருத்தத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று முடிவெடுக்கப்படுமென அவைத்தலைவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சபையில் 20வது திருத்தச் சட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போது, அதனை நிராகரிப்பதாகவும், அவ்வாறு அதில் திருத்தம் வந்தால், அது தொடர்பில் சபை பரிசீலிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அதனடிப்படையில், வடக்கு மாகாண சபை 20வது திருத்தத்தினை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்தது!