1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் வைத்து இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
கிருஷாந்தி உள்ளிட்ட செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் நிகழ்வு செம்மணியில் இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களினால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
1995ஆம் ஆண்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் வந்தது முதல், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அதில், அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

0 Responses to செம்மணி படுகொலைகள்: 21வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!