அண்மைக் காலமாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைத் தாக்கி வந்த ஹார்வே புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. மணிக்கு 210 Km/h வேகத்தில் கடந்த மாதம் முதற் கொண்டு தாக்கி வரும் இந்த ஹரிக்கேன் வகைப் புயலால் இம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக் காடாகி உள்ளன.
கடும் சிரமத்துக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க வரலாற்றில் பெயரிடப்பட்ட 8 ஆவது புயலும் 3 ஆவது ஹரிக்கேனுமாக ஹார்வே புயல் மாறியுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் சுமார் 12 வருடமாக நீடித்து வந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள இந்த ஹார்வே ஹரிக்கேன் மூலம் ஏற்பட்ட மழை வீழ்ச்சியே அமெரிக்காவில் அதிகபட்சமான மழைவீழ்ச்சி ஆகும்.
2005 ஆம் ஆண்டு தாக்கிய வில்மா ஹரிக்கேனுக்கு அடுத்து மிக வலிமையான ஹரிக்கேனாக இது நோக்கப் படுகின்றது. இந்த ஹரிக்கேன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இதுவரை டெக்ஸாஸ் மாநிலத்தில் பல ஆயிரக் கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 30 000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இதில் பாதிக்கப் பட்ட 17 000 பேர் வரை மீட்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் சொத்து மதிப்பும் $70 பில்லியன் டாலரில் இருந்து $200 பில்லியன் டாலருக்கு இடையில் இருக்கும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது.

0 Responses to அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைத் துவம்சம் செய்த ஹார்வே புயலுக்கு 82 பேர் பலி