“இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். எந்தவொரு காரணம் கொண்டும் அரசியலமைப்பு உருவாக்கம் தாமதிக்கக்கூடாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காலதாமதம் ஏற்படாத வகையில் அரசியலமைப்பு வரைவானது இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து உடனடியாக சர்வசன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கமானது இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தக் கருமத்தினை நிறைவேற்றுவதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் சுஷ்மா சுவராஜிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர், இந்திய மத்திய அரசாங்கத்தினது ஒத்துழைப்பை மீள் உறுதி செய்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to புதிய அரசியலமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்: சுஷ்மா சுவராஜூடனான சந்திப்பில் சம்பந்தன் தெரிவிப்பு!