போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளார் என்றும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சரத் பொன்சேகா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே கோத்தபாய ராஜக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவ போர் இரகசியங்களை யாரும் வெளியிடக்கூடாது. அதுவே, இராணுவ மரபாகும். ஒழுக்கமுள்ள தளபதியொருவர் இந்த மரபுக்கு கட்டுப்பாட்டே செயற்படுவார். ஆனால், முன்னாள் தளபதியான சரத் பொன்சேகா போர்க்குற்றங்கள் பற்றி பேசுகிறார். அதன்மூலம் அவர் அரசியல் ஆதாயங்களை அடைய முற்படுகின்றார். ஆனாலும், அவரின் கருத்துக்கள் குறித்த ஆய்ந்து வருகின்றேன். விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் சரத் பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: கோத்தபாய