ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான ஆவணங்கள் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளராக பதவி வகித்த மன்சூர் ஏ.காதர் ஆகியோரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.
சட்டப்படியான இந்த நியமனத்தை தாம் அங்கீகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் பிரசன்னமாகியிருந்தார்.
கடந்த 2015 ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் யாப்பு மாற்றத்தின் பிரகாரம் அப்போது செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த எம்.ரி.ஹசன் அலி, பதவியிழந்த அதேவேளை கட்சியின் உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கட்சியின் 27வது பேராளர் மாநாட்டில் கட்சியின் செயலாளர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்கும் அதிகாரம் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், தற்காலிக செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த ஏற்பாட்டின் பிரகாரமே கட்சியின் புதிய செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் இரு வருட காலமாக கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்!