“புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதலிடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை அனைத்து இனத்தவர்களும், மதத்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அதுபோன்றே, ஏனைய மதங்களுக்கு அவற்றுக்குரிய இடம் வழங்கப்படும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி ரஜமகா விகாரையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மதவழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்புத் தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் இதுவரை புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படவில்லை. அரசியலமைப்புக்கான உபகுழு நியமிக்கப்பட்டு எதிர்காலத்தில் எவ்வாறு அதனை உருவாக்குவது என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. அதற்கான திட்ட வரைபு பற்றியே பேசி வருகிறோம். இம்மாதம் 30, 31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் இது தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளோம். மகாசங்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் கருத்துகள் இதன்போது உள்வாங்கப்படவுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: ரணில்