Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

போதைவஸ்து கடத்தல், கொலை போன்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களிலிருந்து, அரசியல் கைதிகளை வேறுபடுத்தி தனியான சிறைக் கூடங்களில் தடுத்து வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தெரிவித்ததாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண ஆளுநர் நேற்று பிற்பகல் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியற் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக சுமுகமான முடிவுகள் எட்டுவதற்கு ஜனாதிபதி உச்ச அளவில் முயற்சிப்பதாக வடக்கு மாகாண ஆளுநரிடம் கூறியுள்ளார்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியற் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அவர்களை சிறைச்சாலை சென்று சந்திக்கவுள்ளோம். அவர்களது நிலையை நேரடியாக அறிந்த பின் நாளை (இன்று) கொழும்பில் உயர்மட்டச் சந்திப்புக்களில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம். இந்த நிலையில் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகள் தொடர்பாக இன்றைய தினத்துக்குள் தீர்க்கமான முடிவு கிடைக்குமென நம்புகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்க ஜனாதிபதி பணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com