Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இந் நியமனம் நாளை வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்.

புதிய நியமனத்துடன் ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க தனது நியமனக் கடிதத்தை இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

0 Responses to புதிய கடற்படைத் தளபதியாக எஸ்.எஸ்.ரணசிங்க நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com