“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து வெளியேறினாலேயே அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கிஸ்தரும், முன்னாள் ஜனாபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்னமும் இருக்கிறோம். எங்களைப் புறந்தள்ளிவிட முடியாது. எதிர்காலத்தை யோசிக்காது தீர்மானத்தை எடுத்தால் அதற்கான விலையை அவர்கள் கொடுக்கவேண்டிவரும்.'' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடத்திய பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளமை குறித்து கேட்டபோதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாங்கள் பேச்சுக்கு வரமாட்டோம் என்று ஒருபோதும் கூறவில்லையே. பேச்சுக்கு வர முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுக்குள் இருந்து எப்போது ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி வெளியே வருகிறதோ, அன்றே அவர்களுடன் நேரடிப் பேச்சுக்கு நாம் செல்வோம். ஐ.தே.க.வின் எடுபிடியா கவே இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படுகிறது. உண்மையான கட்சிப் போராளிகள் மனதளவில் என்னுடன்தான் உள்ளனர். இன்னும் சில வாரங்களில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்துகொள்ளும்'' என்றுள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வின் பிடியிலிருந்து மைத்திரி வெளியேறினாலேயே பேச்சு: மஹிந்த