Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நான் ‘றோ’ முகவர் அல்ல: பஷில்

பதிந்தவர்: தம்பியன் 06 November 2017

“நான் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வின் முகவர் இல்லை. அதுபோல, அந்த அமைப்பின் ஆலோசனையின் பேரிலும் செயற்படவில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்கிற கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்கவேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். அதற்குரிய திட்டங்களையே ‘றோ' அமைப்பின் ஆலோசனையின் பிரகாரம் பஷில் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க போன்றோர் செயற்படுத்துகின்றனர். சுதந்திரக் கட்சியையும் இவர்களே உடைக்கின்றனர்.” என்று ஊவா மாகாண முதலமைச்சர் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்து கேட்ட போதே பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நான் 2015 ஜனவரி 8ஆம் திகதியே விலகிவிட்டேன். எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், நான் சுதந்திரக் கட்சி உறுப்பினர் அல்லன் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்துக்கொள்வதற்கும், பலப்படுத்துவதற்கும் அக்கட்சி உறுப்பினர்கள்தான் முயற்சிசெய்யவேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை நான் நிறுவிய பின்னர், சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல கட்சிகளினதும் உறுப்பினர்கள் எம்முடன் இணைந்துள்ளனர். வருபவர்களை நாம் எப்படித் தடுக்க முடியும்? தமது கட்சி உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாதவர்கள் என்மீது விமர்சனம் முன்வைப்பது தவறான விடயமாகும். அவற்றை நான் நிராகரிக்கின்றேன்'' என்றுள்ளார்.

0 Responses to நான் ‘றோ’ முகவர் அல்ல: பஷில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com