சென்னையில் நேற்று வியாழக்கிழமை மாலை துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய பெய்தது. இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படியும், யாரும் வீட்டை விட்டுவெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் பெய்த மழையயை பார்த்த மக்களுக்கு 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழைக்கு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தான் நினைவுக்கு வந்தது.
மேலும், தேசிய பேரிடர் மேலாண்மையும் அந்த அச்சத்தை அதிகமாக்கும் வகையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு மிகவும் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் திடீரென இடியுடன் கூடிய மழை நேற்று மாலை சுமார் 5 மணிக்கு பெய்யத் துவங்கியது.
இதனால் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் கடைகள் மற்றும் கிடைத்த இடத்தில் ஒதுங்கி நின்றனர். இந்த கனமழை நள்ளிரவை கடந்தும் விடியவிடிய இடிமின்னலுடன் பெய்து கொண்டே இருந்தது.
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை நேப்பியார் பாலம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள சாலை, கதிட்ரல் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உட்பட சென்னை நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. மேலும், விவேகானந்தர் இல்லம் சாலை, மயிலாப்பூரில் இருந்து ராயப்பேட்டை நோக்கி செல்லும் சாலை, சைதாப்பேட்டை சுரங்கபாதை உட்பட பல சாலைகள் மூடபட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாததால் மயிலாப்பூர், மந்தவெளி, தரமணி, பெரம்பூர், ஓட்டேரி, வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் இந்தப் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

0 Responses to இரவு முழுவதும் மழை; வெள்ளக்காடானது சென்னை!