Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் அதிகரித்துவரும் சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் காரணமாக பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் குறிப்பிட்ட அளவில் வேகத்தை இழந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நடைமுறையிலுள்ள கல்வித் திட்டம் புத்துணர்வூட்டப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சில தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் ஒவ்வொரு நகரிலும் மிகச் சிறந்த பாடசாலைகள் இருந்தன. எனினும், தற்போது அப்பாடசாலைகளின் எண்ணிக்கை பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் சிறந்த பாடசாலையொன்றைத் தெரிவு செய்வதற்காக பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். சர்வதேசப் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக பெற்றோர் செய்யும் செலவீனம் அதிர்ச்சியளிக்கின்றது. அரச சார்பு பாடசாலைகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்குவது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to சர்வதேசப் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்களினால் கல்விச் செயற்பாடுகளில் வேகம் குறைவு: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com