தனித்தனி அணிகளாக பிரிந்து நின்று கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்திலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அணிகளாக பிரிந்து கூட்டங்களை நடத்துவதன் மூலம் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்காலையில் நடத்திய கூட்டத்தை அடிப்படையாக கொண்டே பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அழைப்பின் பேரில் தங்காலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தங்காலையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கூட்டம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

0 Responses to அணிகளாக பிரிந்து நின்று ஐ.தே.க.வுக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்; ரணில் வலியுறுத்தல்!