துருக்கியில் இன்று வெள்ளிக்கிழமை இஸ்தான்புல் நீதிமன்றத்தால் சுமார் 25 பத்திரிகையாளர்களுக்கு 7 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.
துருக்கியில் 2016 ஆம் ஆண்டு முறியடிக்கப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் இவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப் பட்டே இவர்களுக்கு இந்த சிறைத் தண்டனை அளிக்கப் பட்டுள்ளது. இவர்கள் முன்னதாக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளாகவும் செயற்பட்டவர்கள் என்றும் குற்றம் சாட்டப் பட்டிருந்தது.
மேலும் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட அமெரிக்காவில் நாடு கடந்து வாழும் மத போதகரான ஃபெத்துல்லா குலெனுக்கு ஆதரவான ஊடகங்களில் இவர்கள் பணியாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்களை இவர்கள் மறுத்துள்ள போதும் தற்போது அனைவரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

0 Responses to 25 பத்திரிகையாளர்களுக்கு 7 1/2 ஆண்டு சிறைத் தண்டனை அளித்தது துருக்கி