முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்தப் பிடியாணை உத்தரவினை விடுத்துள்ளது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறை மோசடி தொடர்பில் விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அவர் இதுவரை ஆஜராகியிருக்கவில்லை. இந்த நிலையிலேயே, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக பிடியாணை!